ப்ரீ புக்கிங்கில் மாஸ் செய்யும் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி... முதல் நாள் கலெக்ஷன் கணிப்பு
கல்கி 2898 ஏடி
இந்திய ரசிகர்கள் மிவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் கல்கி 2898 ஏடி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் படம் தயாராகியிருக்கிறது, இந்திய சினிமாவின் மிக உயர்ந்த முயற்சிகளில் ஒன்றாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாக் அஷ்வின் தொலைநோக்கு பார்வையில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
நடிகை எமி ஜாக்சனா இது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?... லேட்டஸ்ட் போட்டோ
ப்ரீ புக்கிங்
வரும் ஜுன் 27 அதாவது நாளை படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் மட்டுமே இதுவரை ரூ. 70 கோடி வரை நடந்துள்ளதாம். முதல் நாள் வசூலே படம் ரூ. 180 கோடி மேல் இருக்கும் என கணிக்கப்படுகிறது.