பைரவா பிரபாஸ்.. வெளியான கல்கி 2898 AD படத்தின் புது அப்டேட்
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலமாக இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறினார். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது முந்தைய படமான சலார் 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
அடுத்து நாக் அஷ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தான் அந்த படத்தில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பைரவா
இந்நிலையில் தற்போது கல்கி 2898 AD என்ற படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் பிரபாஸ் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்து இருக்கின்றனர். மேலும் From the future streets of Kasi என படக்குழு குறிப்பிட்டு இருப்பதால் 2898 வருடத்தில் காசியில் நடப்பது போல தான் கதை இருக்கும் என தெரிகிறது.
பைரவா என்ற ரோலில் தான் பிரபாஸ் நடிக்கிறாராம். வரும் மே 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
From the future streets of Kasi, Introducing 'BHAIRAVA' from #Kalki2898AD.#Prabhas #Kalki2898ADonMay9 @SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD pic.twitter.com/GzJyO3V5iQ
— Kalki 2898 AD (@Kalki2898AD) March 8, 2024