1000 கோடியை நெருங்கும் கல்கி! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கல்கி 2898 AD
கல்கி திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்தது. பிரமாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.
பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

வசூல் விவரம் குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வைஜெந்தி மூவிஸ் தொடர்ந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், 9 நாட்கள் முடிவில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து அறிவித்துள்ளனர்.
வசூல்
அதன்படி, கல்கி திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சொல்லப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் கல்கி திரைப்படம் என்னென்ன வசூல் சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைக்க போகிறது என்று.
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan