கமல் - ஹெச். வினோத் படத்தின் தலைப்பு இதுதானா.. செம மாஸ்

By Kathick Oct 24, 2023 08:10 AM GMT
Report

கமல் ஹாசன்

பிஸியான நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல் ஹாசன். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2, கமல் 233, கமல் 234, கல்கி 2898 AD என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கமல் - ஹெச். வினோத் படத்தின் தலைப்பு இதுதானா.. செம மாஸ் | Kamal 233 Movie Title Update

இதில் தற்போது இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக 40 நாட்கள் ஒதுக்கியுள்ளாராம் கமல். இப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் கமல் 233 படத்தில் நடிக்கவுள்ளார்.

கமல் - ஹெச். வினோத் படத்தின் தலைப்பு இதுதானா.. செம மாஸ் | Kamal 233 Movie Title Update

அரசியல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக கமல் ஹாசன் துப்பாக்கி பயிற்சி எடுக்கும் வீடியோ கூட வெளிவந்து இருந்தது.

லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் விஜய்யின் மனநிலை என்ன.. வெளிவந்த தகவல்

லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் விஜய்யின் மனநிலை என்ன.. வெளிவந்த தகவல்

கமல் 233 தலைப்பு

இந்நிலையில், இப்படத்திற்கு தலைவன் இருக்கின்றான் என தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தேவர் மகன் 2 படத்தின் தலைப்பை மாற்றி தலைவன் இருக்கின்றான் என வைக்க கமல் திட்டமிட்டு இருந்தார்.

கமல் - ஹெச். வினோத் படத்தின் தலைப்பு இதுதானா.. செம மாஸ் | Kamal 233 Movie Title Update

ஆனால், தற்போது அந்த தலைப்பு ஹெச். வினோத் படத்திற்கு வைக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US