லியோ, ஜெயிலர் படங்களை தாக்கி பேசினாரா கமல் ஹாசன்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்
ஜெயிலர் - லியோ
இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்றால் அது ரஜினியின் ஜெயிலர் மற்றும் லியோ தான்.
இதில் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் விஜய்யின் லியோ ரூ. 598 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை நிகழ்த்தியது.
சின்னத்திரையில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதை நாம் அறிவோம்.
இந்த நிகழ்ச்சியில் வார இறுதியில் வரும் கமல் ஹாசன் நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட விஷயங்களுடன் சேர்த்து அரசியல் மற்றும் சினிமா குறித்தும் பேசுவார்.
தாக்கி பேசியனாரா கமல்
அதே போல் கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் பேசிய கமல் 'எத்தனை நாள் 500 கோடி ரூபாய் படம் 600 கோடி ரூபாய் படம், உங்களுக்கு நல்ல படம் பார்க்கணுமுணு ஆசையே இல்லை. அப்படி இல்லனா இதுதான் கிடைக்கும்' என பேசியிருந்தார்.
லியோ மற்றும் ஜெயிலர் படங்களை தாக்கி தான் கமல் இப்படி பேசினாரா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்ததிருந்த என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
