அந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம்.. சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த கமல்
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மட்டுமின்றி அரசியல் கட்சியும் நடத்தி வருகிறார் என்பதால் அவர் செய்யும் விஷயங்கள் அரசியல் கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் பாடலில் கமல் 'ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னுமில்லே இப்பாலே' என கமல் பாடினார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் ஒன்றிய அரசை குறை கூறுகிறார் என அவர் மீது போலீஸ் புகாரும் அளிக்கப்பட்டது.

விளக்கம்
இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்திருக்கும் பெட்டியில் 'ஒன்றியம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறி இருகிறார்.
"பத்திரிகையாளர்கள் கூடினால் அது ஒன்றியம், தயாரிப்பாளர்கள் கூடி சங்கம் நடத்தினால் அது ஒன்றியம் தான்" என கமல் கூறி இருக்கிறார். பெரிய சர்ச்சைக்கு கமல் கொடுத்த விளக்கம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.
முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை பிரியங்கா மோகன்.. முதல் முறையாக இணையும் ஜோடி