ரஜினி - கமல் இணையும் படம்.. விருது விழாவில் உறுதி செய்த கமல்! - என்ன கூறினார் பாருங்க
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது.
கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.
உறுதி செய்த கமல்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில் நடிகர் கமல் பேசும்போது தான் சூப்பர்ஸ்டார் உடன் இணைவதை உறுதி செய்து இருக்கிறார்.
அது தரமான சம்பவம் என சிலர் சொல்வது பற்றி பேசிய கமல் "படம் கொடுக்கிறோம், அதை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என சொல்லுங்கள். அதற்கு முன்பே தரமான சம்பவம் என சொன்னால் எப்படி. திடீர்னு தரதரனு கூட இழுத்துடுவோம்."
"உங்களுக்கு படம் பிடித்தால் மகிழ்ச்சி, பிடிக்கவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்வோம்" என கமல் கூறி இருக்கிறார்.
நாங்கள் இணைகிறோம். எங்களுக்குள் போட்டி என்பது நீங்கள் ஏற்படுத்தியது தான். ஆனால் எங்களுக்கு அது போட்டி கிடையாது எனவும் கமல் தெரிவித்து இருக்கிறார்.