ஒரு நிகழ்ச்சியையும் விட்டுவைக்காத கமல் ! விஜய் டிவி-யிலே தங்கிட்டாரே..
வேற லெவல் ப்ரோமோஷன்
உலகயநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்து கமலுடன் நடித்துள்ள விக்ரம் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே தான் இருக்கிறது.
மேலும் படத்தின் ப்ரோமோஷன்களை கமல் வேற லெவல் லெவலில் செய்து வருகிறார், அதன்படி நேற்று ஹைதெராபாத் சென்றிருந்த கமல் இன்று துபாய்யில் படத்தின் ப்ரோமோஷன் செய்ய இருக்கிறார்.
அதுமட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கமல் தொடர்ந்து பங்கு பெறுவதை பார்த்து வருகிறோம். விக்ரம் ஸ்பெஷல், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கமல் கலந்து கொண்டுள்ளார்.
அந்த ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது, அதை கண்ட ரசிகர்கள் விஜய் டிவி-யின் ஒரு நிகழ்ச்சியையும் கமல் விட்டுவைக்கவில்லை என கூறிவருகின்றனர்.