கமலின் வில்லனாகும் பிரபல ஹீரோ - வெறித்தனமான சம்பவம் செய்யப்போகும் ஹெச். வினோத்
கமல் ஹாசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் "விக்ரம்". இப்படம் பெரிய ஹிட் கொடுத்து வசூல் சாதனை படைத்தது.
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் "இந்தியன் 2" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்து நடிக்க இருக்கும் தனது 233 வது படத்தை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. இதை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். மேலும், இப்படத்தின் திரைக்கதை தயாரிக்கும் பணியை கமல் அலுவலகத்தில் தொடங்கியுள்ளார்.
இவர் தான் வில்லனா
இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வேண்டும் என இயக்குனர் வினோத்திடம் கமல் கூறியுள்ளார். இதனால் விஜய் சேதுபதியை மனதில் வைத்து கொண்டு இயக்குனர் வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறார்.
இதற்காக விஜய் சேதுபதியிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் சம்பளம் மற்றும் கால்ஷீட் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறது என தகவல் வந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
பெரிய விபரீதத்தில் இருந்து உயிர் தப்பிய தொகுப்பாளினி ரம்யா- அவரே வெளியிட்ட போட்டோ