என் அன்பு காதலி.. தொகுப்பாளினி டிடி-இடம் கூறிய கமல் ஹாசன்..
கமல்
காதல் மன்னனாக திரையுலகில் இருந்தவர் கமல் ஹாசன். இவர் முதலில் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் அதன்பின் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதன்பின் நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அதன்பின் இருவரும் விவாகரத்து பெற்று பிரித்தார்கள்.
கமல் - ஸ்ரீவித்யா காதல்
கமல் ஹாசன் காதலித்த பெண்களில் ஒருவர் நடிகை ஸ்ரீவித்யா. இவர்கள் இருவரும் காதலித்தது திரையுலகம் அறிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது. ஆனால், ஸ்ரீ வித்யாவின் தாய் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் இருவரும் பிரித்துள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை ஸ்ரீ வித்யா இறுதியாக கமல் ஹாசனை பார்க்க வேண்டும் என மரணப்படுக்கையில் ஆசைப்பட்டுள்ளார். அப்போது கமல் ஹாசன் ஸ்ரீ வித்யாவை நேரில் சந்தித்து கண்ணீர் விட்டு அழுததாக சொல்லப்படுகிறது.
என் அன்பு காதலி
இந்நிலையில், தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல் ஹாசன், ஸ்ரீ வித்யாவுடனான காதல் குறித்து பேசினார்.

இதில் 'ஸ்ரீ வித்யா என்னுடைய அன்பு காதலி. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை' என வெளிப்படையாக தொகுப்பாளினி டிடி-இடம் கூறினார்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
அணு ஆயுத அச்சுறுத்தல், AI-ன் தீய பயன்பாடு... மனிதகுல அழிவிற்கு நாள் குறித்த ஆய்வாளர்கள் News Lankasri