எம்.ஜி.ஆர் உடன் கமல் ஹாசன் நடித்த காட்சி.. அன்ஸீன் வீடியோ
கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் சில நட்சத்திரங்களுக்கு எப்போதுமே அறிமுகம் தேவையில்லை. அப்படி மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள நட்சத்திரம்தான் நடிகர் கமல் ஹாசன்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இதை தொடர்ந்து இந்தியன் 3 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதே போல் கமல் ஹாசன் 234 திரைப்படமும் அவர் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்ஸீன் வீடியோ
திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் புரட்சி தலைவர் நடிகர் எம்.ஜி. ராமசந்திரன் அவர்களுடன் கமல் ஹாசன் நடித்த காட்சிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல் ஹாசன் தனது சிறு வயதில் எம்.ஜி.ஆர் உடன் நடித்த அந்த காட்சி இதோ பாருங்க:
MGR and Kamalhasaan one shot.😍
— Rajakrishna 🏹 (@Rajatheraja1996) January 4, 2026
எங்க அம்மா சொல்லி குடுத்த நல்லது மட்டும் தான் என் கூடவே இருக்கு.🥰🥰 #KamalHassan #MGRr @ikamalhaasan pic.twitter.com/KZ0sImhVEm