விஜய்க்கு நடிகர் கமல் கொடுத்த அட்வைஸ்.. அது விஜய்க்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும்
நடிகர் விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்கி தமிழ்நாடு முழுவதும் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார்.
மக்கள் கூட்டம் விஜய்யை பார்க்க அலைமோதும் நிலையில் அவரை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என திமுக உள்ளிட்ட காட்சிகள் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.
கமல் அட்வைஸ்
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு ஒரு அட்வைஸ் கூறி இருக்கிறார். "வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்கிறார்களே என செய்தியாளர் கமலிடம் கேட்டபோது, "கண்டிப்பாக மாறாது, அது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்".
"விஜய்க்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும், இந்தியாவில் இருக்கும் எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். கூட்டம் சேத்துட்டா மட்டும் அது ஓட்டாக மாறாது" என கமல் தெரிவித்து இருக்கிறார்.
விஜய்க்கு நான் சொல்லும் அட்வைஸ்.. நல்ல பாதையில் செல்லுங்கள், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள். "எங்களுக்காக எதாவது செய்யுங்க, உங்களை எங்கே கொண்டு சென்று வைக்க வேண்டுமோ வைக்கிறோம்" என மக்கள் சொல்கிறார்கள், அதை தான் நானும் சொல்கிறேன் என கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.