அடுத்த படத்தில் விக்ரம் vs ரோலக்ஸ்.. கமல் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்! வீடியோ இதோ
விக்ரம் படம் தமிழ் மட்டுமின்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த வருடத்தில் பீஸ்ட் செய்த வசூல் சாதனைகளை இந்த படம் அசால்டாக முறியடித்து 2022ன் டாப் படங்கள் லிஸ்டில் இடம்பிடித்து இருக்கிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு நன்றி கூறி கமல் ஐந்து மொழிகளில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கமல் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தமிழில் அவர் பேசியிருக்கும் வீடியோவில் சூர்யா உடன் அடுத்து இணையப்போகும் படம் பற்றி அறிவித்து உள்ளார் அவர்.
”கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அவருக்கு நன்றி கூறும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என நினைக்கிறேன்" என கமல் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதனால் விக்ரம் vs ரோலக்ஸ் கதை அடுத்த படத்தில் முழுவதும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
Thank you
— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2022
With love ,
Kamal Haasan@ikamalhaasan @Dir_Lokesh @Udhaystalin @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @spotifyindia @SonyMusicSouth @RedGiantMovies_@actor_nithiin @anbariv @girishganges @philoedit pic.twitter.com/nZnB71r3dF
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri