குணா குகையில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள்.. ஹே ராம் படத்தில் பயன்படுத்திய கமல் ஹாசன்

Kathick
in பிரபலங்கள்Report this article
குணா குகை
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். குணா குகையை சுற்றி பார்க்க செல்லும் நண்பர்களுக்கு நடக்கும் அதிர்ச்சி சம்பவம் தான் இப்படம்.
இப்படத்தில் கமல் ஹாசனின் குணா படத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார் கமல். அதுமட்டுமின்றி படக்குழுவினர்களிடம் உரையாடினார்.
அப்போது குணா படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை கமல், மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவுடன் பகிர்ந்துகொண்டார்.
மண்டை ஓடுகளை பயன்ப்படுத்திய கமல்
இதில், குணா படத்தின் படப்பிடிப்பின் போது, அங்கிருந்து மூன்று குரங்குகளின் மண்டை ஓடுகளை எடுத்தாராம் கமல் ஹாசன். குகையில் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் குரங்குகள், அங்கேயே இருந்து விடுமாம்.
அப்படி இறந்த குரங்குகளின் மண்டை ஓடுகளை கமல் எடுத்துள்ளார். அந்த மூன்று குரங்குகளின் மண்டை ஓடுகளை, தான் இயக்கிய ஹே படத்தில் வரும் ஒரு காட்சியில் பயன்படுத்தியதாக கமல் ஹாசன் கூறினார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..