உலகநாயகன் கமல் ஹாசனின் ஆடை வடிவமைப்பாளர் இவர் தான்.. வெளிவந்த புகைப்படம்
கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையயோடு, அ. வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பார் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பிறகு தான் மணி ரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே கமிட் செய்து வைத்துள்ள படத்தில் நடிப்பாராம் கமல்.
நடிகராக ரொம்ப பிசியாக இருக்கும் கமல் அதே போல் தயாரிப்பாளராகவும், சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களையும் தயாரித்து வருகிறார்.
கமல் ஹாசன் ஆடை வடிவமைப்பாளர்
இந்நிலையில், கமல் ஹாசன் எங்கு சென்றாலும், பார்ப்பதற்கு கிளாஸ் மற்றும் மாஸாக தெரிய முக்கிய காரணம் அவருடைய ஆடை. அப்படி அவருக்கு சூப்பராக ஆடை வடிவமைத்து தருபவர் தான் அமிர்தா ராம்.
இவர் கமல் ஹாசனுடன் விமானத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

நயன்தாரா ஆடவிருக்கும் கிரிக்கெட்.. இணையவிருக்கும் சூப்பர் கூட்டணி