நடிகை ராதிகா சரத்குமாருடன் செம குத்தாட்டம் போட்ட கமல் ஹாசன்.. வீடியோவுடன் இதோ
கமல் ஹாசன்
சமீபத்தில் விக்ரம் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் மீண்டும் கம் பேக் கொடுத்தார் உலகநாயகன் கமல் ஹாசன்.
இப்படத்தையடுத்து கமல் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று அனைவரின் மத்தியிலும் கேள்வி இருந்தது. அதை தீர்த்துவைக்கும் விதமாக KH234 படத்தின் அறிவிப்பு வெளிவந்தது.
அடுத்தடுத்த படங்கள்
மணி ரத்தினத்தின் இயக்கத்தில் தான் தன்னுடைய 234வது படத்தில் நடிக்கப்போகிறார் கமல் என உறுதியாகிவிட்டது.
ஆனால், இதுவரை KH233 படத்தை இயக்கப்போவது யார் என்று தெரியவில்லை. எச். வினோத் என கூறி வரும் நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ராதிகாவுடன் செம குத்தாட்டம்
கடந்த 7ஆம் தேதி தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய கமல் ஹாசன் பிரமாண்டமாக பார்ட்டி ஒன்றை அரங்கேற்றினார். இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், அந்த பார்ட்டியில் பத்தல பத்தல பாடலுக்கு நடிகை ராதிகாவுடன் கமல் ஹாசன் குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
#Ulaganayagan @ikamalhaasan dancing for his song #PathalaPathala along with Mrs. @realradikaa on his birthday party ❤️?? happy to see him being happy he deserve all the love ❤️❤️❤️ pic.twitter.com/SsikEGews0
— Sankarganesh_Lovepeace??MNM (@SankarganeshLo1) November 9, 2022
ரஜினிகாந்த், மணிரத்னம் கலந்துகொண்ட பார்ட்டியில் அடிதடி.. பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர்