கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?. லேட்டஸ்ட் லுக்
கமல்ஹாசன்
வாணி கணபதி, ஒரு பரதநாட்டிய கலைஞர், இவரின் நிஜ பெயர் வாணி பாரதி தானாம்.
தனது 3 வயதில் கல்கத்தாவில் டி.ஏ.ராஜலட்சுமியிடம் நடன பயிற்சியை துவங்கியுள்ளார். சிறுவயதிலேயே பம்பாய் சென்றவர் கல்வியை தொடர்ந்து போது நடன பயிற்சியையும் விடாமல் மேற்கொண்டுள்ளார்.
1973ம் ஆண்டு ஹிந்தியில் Pyaasi Nadi என்ற படத்தில் அறிமுகமானவர் தமிழில் 1975ம் ஆண்டு இயக்குனர் AP நாகராஜ் இயக்கத்தில் உருவான மேல்நாட்டு மருமகள் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார்.
இந்த படத்தில் நடிக்கும் போது இருவருக்கு காதலாக மாற திருமணமும் செய்தார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை 10 வருடத்தில் முடிவுக்கு வந்தது, காரணம் குழந்தை இல்லாதது என்று கூறப்பட்டது.
லேட்டஸ்ட் போட்டோ
பின் சினிமா பக்கம் வராமல் இருந்த நடிகை வாணியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 73 வயதிலும் அழகு குறையாமல் மிகவும் பிட்டாக காணப்படுகிறார்.
வாணி கணபதி, டான்சர் என்பதை தாண்டி திரையுலகினர் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் பிரபலமாக உள்ளார். தனது நடன பள்ளி மூலம் கிடைக்கும் பணத்தில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
You May Like this Video