அது புது ரோலக்ஸ் வாட்ச் இல்லை.. சூர்யாவை கண்கலங்க வைத்த கமல்! உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து இருந்த விக்ரம் படம் தமிழ்நாட்டில் உச்சகட்ட வசூலை பெற்று வருகிறது. இதுவரை வந்த படங்களின் சாதனைகளை முறியடித்து தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படமாக விக்ரம் மாறி இருக்கிறது.
விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யாவுக்கு கமல் ஒரு விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை கிப்ட்டாக கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
"அது கமல் சார் புதிதாக வாங்கிய வாட்ச் இல்லை, அவரது இதயத்திற்கு நெருக்கமான ஒரு வாட்சை தான் சூர்யாவுக்கு கிப்ட்டாக கொடுத்து இருக்கிறார். அது கமல் முதன்முதலில் வாங்கிய காஸ்ட்லீ வாட்ச்" என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
கமல் கிப்ட் கொடுத்த அந்த நேரத்தில் சூர்யா சற்று கண்கலங்கிவிட்டார் என்றும் லோகேஷ் தெரிவித்து இருக்கிறார்.

ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu