ஒரே நேரத்தில் 6 நடிகைகளுடன் காதலில் கமல் ஹாசன்.. ஆனால் திருமணம் இவருடன் தான்
சகலகல வல்லவன் கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் சகலகல வல்லவனாக வலம் வந்த நடிகர்களில் ஒருவர் கமல் ஹாசன். இவரை பற்றி பல தகவல்கள் இதுவரை வெளிவந்துள்ளது.
அந்த வகையில் தற்போது நடிகர் கமல் ஹாசன் ஒரே நேரத்தில் 6 நடிகைகளை காதலித்து வந்துது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல நடிகை குட்டி பதமினி கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் 6 நடிகைகளுடன் காதல்
அவர் கூறியதில் "நடிகர் கமல் ஹாசன் அந்த காலகட்டத்தில் ஒரே சமயத்தில் 6 நடிகைகளை காதலித்தார். ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா, வாணி கணபதி, ஜெயசுதா மற்றும் இரு நடிகைகளை காதலித்தார். அந்த இரு நடிகைகளும் தற்போது திருமணமாகி நன்றாக இருக்கிறார்கள், இதனால் அவர்களின் பெயரை நான் குறிப்பிடவில்லை. ஆனால், எப்படி இத்தனை போரையும் அவர் சமாளித்தார் என எனக்கு தெரியவில்லை. அதனால் தான் அவர் சகலகலா வல்லவனாக இருக்கிறார்" என கூறியுள்ளார்.
இந்த 6 நடிகைகளின் வாணி கணபதியை தான் திருமணம் செய்துகொண்டார் கமல். ஆனால், இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதன்பின், சரிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நடிகைகள், ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை.. அது யார் தெரியுமா?