பெங்காலி நடிகையை காதலித்த கமல் ஹாசன்.. யார் அந்த நடிகர் தெரியுமா? மகள் ஸ்ருதி ஹாசன் கூறிய உண்மை
கமல் ஹாசன்
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் என இரு திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினியுடன் இணைந்து கமல் நடிக்கப்போவதாக பேச்சு நடிப்படுகிறது. கூடிய விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.
நடிகர் கமல் ஹாசன் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி என பல்வேறு மொழிகள் பேசுவார். இந்த நிலையில், கமல் ஹாசன் பெங்காலி மொழி படத்தில் நடிக்கும்போது அந்த மொழியை ஏன் கற்றுக்கொண்டார் என்பது குறித்து கமலின் மூத்த மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
பெங்காலி நடிகையை காதலித்த கமல்
கூலி படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் பங்கேற்றனர். இந்த பேட்டியில் கமல் ஹாசன் குறித்து பேச்சு வரும்போது, அவர் ஒரு மொழியை கற்றுக்கொள்வதில் சிறந்தவர், ஒரு பெங்காலி படத்திற்காக பெங்காலி மொழியை அவர் கற்றுக்கொண்டார் என சத்யராஜ் கூற, அது உண்மையில்லை அவர் ஏன் பெங்காலி மொழி கற்றுக்கொண்டார் என உங்களுக்கு தெரியுமா என ஸ்ருதி ஹாசன் கேள்வி எழுப்பினார்.
கமல் ஹாசன் பெங்காலி நடிகை அபர்ணா சென் என்பவரை காதலித்தார், அதற்காகத்தான் அவர் பெங்காலி மொழி கற்றுக்கொண்டார். அந்த நடிகையின் பெயரைதான் ஹேராம் திரைப்படத்தில் ராணி முகர்ஜீ கதாபாத்திரத்துக்கு அப்பா வைத்தார் என ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.