மாபெரும் வெற்றியடைந்த மஞ்சுமெல் பாய்ஸ்.. படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல் ஹாசன்
மஞ்சுமெல் பாய்ஸ்
மலையாள திரையுலகில் இருந்து வெளிவந்து இன்று தென்னிந்திய அளவில் பாராட்டுகளை குவித்து வரும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த Jan.E.Man எனும் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இதுவரை மலையாளத்தில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் தொடர் சாதனைகளை புரிந்து வருகிறது.
விபத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதா போட்ட பதிவு- தற்போது அவரது நிலை, புகைப்படத்துடன் இதோ
இப்படத்தில் கமல் ஹாசனை கௌரவப்படுத்தும் விதமான காட்சிகளை அமைத்திருந்தனர். கமலின் குணா படத்தில் வரும் பாடலை இப்படத்தில் வைத்து திரையரங்கையே தெறிக்கவிட்டு இருந்தார் இயக்குனர் சிதம்பரம்.

கமலுடன் மஞ்சுமெல் பாய்ஸ்
இந்நிலையில் தன்னையும், தன்னுடைய படத்தையும் கௌரவித்த மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கமல் ஹாசனை சந்தித்துவிட்டு, வெளியே வந்த இயக்குனர் சிதம்பரம் 'இதை விட வேறு எனக்கு என்ன வேண்டும்' என நெகிழ்வாக பேசினார்.

கமல் ஹாசன் மட்டுமின்றி பிரபல நடிகரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினையும் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழு நேரில் சந்தித்துள்ளனர்.
