ரஜினியை பற்றி கேள்விப்பட்டதும் ஓடோடி வந்த கமல்- திடீர் சந்தித்த பிரபலங்கள்

By Yathrika Nov 23, 2023 11:00 AM GMT
Report

ரஜினி-கமல்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி-கமல். இவர்கள் காலத்தில் இல்லாத ரசிகர்கள் சண்டையே கிடையாது, ஆனால் அவர்களை மிகவும் பக்குவமாக கையாண்டு இவர்களும் நண்பர்களாக வலம் வந்தார்கள்.

இப்போதும் ஒருவர் மீது ஒருவர் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள், எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவ்வளவு நெருக்கமாக பழகுவார்கள். தற்போது இருவருமே அவரவர் படங்களில் பிஸியாக உள்ளார்கள். 

தற்போது இவர்களின் படப்பிடிப்பில் தான் ஒரு இன்ப அதிர்ச்சியான சந்திப்பு நடந்துள்ளது.

ரஜினியை பற்றி கேள்விப்பட்டதும் ஓடோடி வந்த கமல்- திடீர் சந்தித்த பிரபலங்கள் | Kamal Haasan Met Rajinikanth In Shooting Spot

வைரலாகும் புகைப்படங்கள்

அதாவது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும், ரஜினியின் 170வது படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் ஒரே அரங்கில் நடந்து வந்துள்ளது.

ரஜினி, கமல்ஹாசன் இதே இடத்தில் ஷுட்டிங்கில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டவர் நண்பரை காண செல்லலாம் என இருந்துள்ளார். 

மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

அதேசமயம் கமல்ஹாசன் காதிலும் ரஜினி இருப்பது தெரிய வர அவர் உடனே நண்பர் இருக்கும் இடத்திற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ரஜினியை பற்றி கேள்விப்பட்டதும் ஓடோடி வந்த கமல்- திடீர் சந்தித்த பிரபலங்கள் | Kamal Haasan Met Rajinikanth In Shooting Spot

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US