ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தை மிஸ் செய்த கமல் ஹாசன்.. மாபெரும் வாய்ப்பை இப்படி நழுவ விட்டுட்டாரே
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார். ரஜினியின் நடிப்பில் இதுவரை வெளிவந்த பல படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

அதில் ஒன்று தான் முரட்டுக்காளை. எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருத்த இப்படத்தின் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் ரஜினி என்று கூட சொல்லாமல்.
மிஸ் செய்த கமல் ஹாசன்
இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு முன் ஹீரோவாக நடிக்கவிருந்தது கமல் ஹாசன் தானாம்.

இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் முதல் சாய்ஸ் ஆகவும் கமல் ஹாசனாக தான் இருந்தாராம். கமலின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் ரஜினியை கமிட் செய்தார்களாம்.