3 வயதில் இருந்தே, வாழ்க்கையை இழந்தவர்கள் நாங்கள்.. கமல்ஹாசன் ஓபன் டாக்
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.
இவர் நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளிவர உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓபன் டாக்
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன், நடிகை திரிஷா, நடிகர் சிம்பு ஆகியோர் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா குறித்து கமல் சொன்ன விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் என் அப்பா மற்றும் அண்ணாவை பார்த்து தான் நடக்க மற்றும் சினிமா என்றால் என்ன என்பது குறித்து கற்றுக் கொண்டேன். எங்களை நட்சத்திர அந்தஸ்தில் தூக்கி வைத்து எதையும் செய்ய விடாமல் தடுத்து விடுவார்கள்.
சாதாரண வாழ்க்கையை இழந்தவர்கள் நாங்கள். அதனால் தான் சிலர் விசித்திரமாக நடந்து கொள்கிறார்கள். இதை 3 வயதில் இருந்து நானும், சிம்பும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.