பிக்பாஸ் ஷோ குறித்து அதிரடி முடிவு எடுத்த கமல்ஹாசன்.. அவரே வெளியிட்ட அறிக்கை
பிக்பாஸ்
ஹாலிவுட்டில் படு ஹிட் அடித்த பிக்பாஸ் ஷோ பாலிவுட் பக்கம் வந்து 15க்கும் மேற்பட்ட சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சி தாக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய பக்கம் வந்தது.
கடந்த 2017ம் ஆண்டு தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க ஒளிபரப்பானது. முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த ஆதரவு தொடர்ந்து 7 சீசன்கள் நடந்தது, அத்தனை சீசனையும் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கி வந்தார்.
இடையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு எபிசோடு நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.
நடிகரின் டுவிட்
விரைவில் பிக்பாஸ் 8வது சீசன் ஒளிபரப்பாக உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்றும் உங்கள் நான்.@vijaytelevision pic.twitter.com/q6v0ynDaLr
— Kamal Haasan (@ikamalhaasan) August 6, 2024