சுதா கொங்கராவிற்கும், சிவகார்த்திகேயனுக்கும்... பராசக்தி படம் குறித்து கமல்ஹாசன் விமர்சனம்
பராசக்தி படம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் கடைசி நேர பிரச்சனைகளுக்கு பிறகு எப்படியோ சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகிவிட்டது.
கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் பெற பிரச்சனை சந்தித்த இப்படம் ஜனநாயகன் போல் ரிலீஸ் தள்ளிப்போகுமோ என நினைக்க கடைசியில் வெற்றிகரமாக ஜனவரி 10 இன்று வெளியாகிவிட்டது.

பராசக்தி படம் 1960களின் காலகட்டத்தில் நடந்த மொழி பிரச்சனை குறித்து பேசும் படமாகும்.
கமல்ஹாசன்
இன்று காலை படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் படத்தை பார்த்துவிட்டு நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி எல்லாம் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர்.

தற்போது நடிகர் கமல்ஹாசனும் பராசக்தி படத்தை இயக்கி சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா என அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இப்படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்பது தனது ஆசை என பதிவு செய்துள்ளார்.
