கமல் முன்னாள் மனைவி சரிகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. மகள் ஸ்ருதி உடன் எடுத்த புகைப்படம்
கமல் ஹாசன் - வாணி கணபதி
நடிகர் கமல் ஹாசன் 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 10 ஆண்டுகள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் 1988ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டனர்.
கமல் ஹாசன் - சரிகா
இதன்பின் கடந்த அதே ஆண்டில் நடிகை சரிகாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கமல் ஹாசன். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நடிகைகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டு கமல் - சரிகா ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சரிகாவின் ரிசண்ட் புகைப்படம்
இந்நிலையில் கமலின் இரண்டாவது மனைவி சரிகாவிற்கு தற்போது 63 வயதாகும் நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த Modern Love Mumbai வெப் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கொரோனா காலகட்டத்தில் சரிகா பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டதாக கூட சில தகவல்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சரிகா தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், எப்படி இருந்த சரிகா இப்போது எப்படி இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..




குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
