அதில் முன்னேற்றம் இருப்பதால் மருதநாயகம் படம் சாத்தியம்... கமல்ஹாசன் சொன்ன விஷயம்
கமல்ஹாசன்
சினிமாவின் மீது தீரா காதல் கொண்டுள்ள பிரபலங்களில் ஒருவர் தான் நடிகர் கமல்ஹாசன்.
எத்தனையோ படங்கள் நடித்துள்ளார், நிறைய படங்களை இயக்கியும் உள்ளார், ஆனால் அவரது கனவுப்படம் என்றால் மருதநாயகம் தான். ஆங்கிலேயே காலத்தில் வாழ்ந்த மருதநாயகன் என்ற மன்னரை பற்றிய படம் அது.

கமல்ஹாசனே இயக்கி நடிக்க, அபிராமி போன்ற கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இப்படத்தின் தொடங்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்திருந்தது அப்போது மிகவும் வைரலாக பேசப்பட்டது.
படத்திற்காக நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் செய்து வந்தவர் அப்போதைக்கு தொழில்நுட்பம், பட்ஜெட் காரணங்களால் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

புதிய தகவல்
தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக கோவா சென்றிருக்கிறார் கமல்ஹாசன்.
அப்போது மருதநாயகம் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு அவர், தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மருதநாயகம் படம் சாத்தியமாகலாம் என்பது என்னுடைய நம்பிக்கை என்றிருக்கிறார்.
