தேசிய விருது, ஏன் என கேட்ட கமல்ஹாசன்.. எம்.எஸ்.பாஸ்கர் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்
எம்.எஸ்.பாஸ்கர்
நடிப்பின் அரக்கனாக, எப்படிபட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்தும் ஒரு நடிகராக இருப்பவர் எம்.எஸ்.பாஸ்கர். காமெடியனாக, குணச்சித்திர நாயகனாக நடித்து இப்போதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
சமீபத்தில் பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் வென்றார். இதற்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலர் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஷாக்கிங் தகவல்
இந்நிலையில், தேசிய விருது குறித்து கமல் அவரிடம் சொன்ன விஷயம் தொடர்பாக எம்.எஸ்.பாஸ்கர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், கமல் எனக்கு ஃபோன் செய்து எங்கே என்ன நடக்குது என்றார். நான் ஷூட்டிங்கில் இருக்கிறேன் அண்ணா என்று சொன்னேன். சரி நியூஸ்லாம் பார்ப்பது இல்லையா என்று கேட்டார்.
அதற்கு நான் பார்க்கிறேன், எனக்கு தேசிய விருது கொடுத்திருக்கிறார்கள் என்று கூறினேன். உடனே அவர் ஏன் என்று கேட்டார்.
நான் அதற்கு ஏன் கொடுத்தார்கள் என கேட்கிறீர்களா என கேட்டதற்கு, இல்லை ஏன் இவ்வளவு லேட் சொல்லிவிட்டு; விருது வாங்கியதால் வேலையிலும், சின்சியாரிட்டியிலும் கொஞ்சம்கூட குறை வைத்துவிடக்கூடாது என்று சொன்னார்" என எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
