விதியை மதியால் வென்றவர் ரஜினி.. வெளிப்படையாக கூறிய கமல் ஹாசன்
கமல் ஹாசன் - ரஜினிகாந்த
கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த இருவரும் தங்களுடைய ஆரம்பகால சினிமா வாழ்கையில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதை நாம் அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன் கமல் ஹாசன் கொடுத்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்தும், அவருடைய திரையுலக பயணம் குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறியதவது :
‘ நானும் ரஜினியும் ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்துகொள்வோம். அப்போது ஒருமுறை, நீங்கள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி, ஸ்டைலான கதாபாத்திரங்களை மட்டுமே நடிக்கிறீர்கள். இனியாவது வெவ்வேறு கதாப்பாத்திரங்களை தேர்ந்தேடுத்து நடிக்க வேண்டும் என்று ரஜினியிடம் கூறினேன். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டு. அதை நீங்க பண்ணுங்க, எனக்கு எப்பவுமே ஸ்டைல் தான், என்று சொன்னார். அந்த சமயத்தில் அவருக்கு இருந்த தெளிவு.

இது தான் என்னுடைய பாதை என்று அவர் முடிவெடுத்த விதம். அவர் நினைத்து இருந்தால். எந்த மாதிரியான கதாபாத்திரங்களை வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். அவர் இன்ஸ்டியூட் சென்று நடிப்பை படித்தவர். நான் கூட அப்படி படிக்கவில்லை. ஆனால், இது தான் என்னுடைய பாதை என்று, அப்போதே முடிவெத்து வீதியை மதியால் வென்றவர் ரஜினிகாந்த் ‘ என கூறியுள்ளார் கமல்.

கமல் ஹாசன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ரஜினியின் மேல் அவர் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. ரஜினிகாந்த் - கமல் கூட்டணியில், ராஜ் கமல் நிருவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாகவிருப்பதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri