தெரு நாய்கள் பிரச்சனை குறித்து கேட்கப்பட்ட கேள்வி... அது ரொம்ப சிம்பிள், கமல்ஹாசன் பதில்
தெரு நாய்கள்
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் தெரு நாய்களுக்கான பிரச்சனை பற்றி அதிகம் பேசப்படுகிறது.
இதுகுறித்து விஜய் டிவியின் நீயா நானா ஷோவில் ஒரு பெரிய விவாதமே நடக்க அது பிரச்சனையாகிவிட்டது. நாய்களை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்பவர்கள் என இரு தரப்பினரை வைத்து விவாதம் நடந்தது.
இதில் சிலர் பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
கமல்ஹாசன்
இந்த நிலையில் தெருநாய்கள் பிரச்சனை குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ஓட்டை காணோம், வாக்காளர் பட்டியலில் பெயரை காணோம் என நான் சொல்லி கொண்டிருக்கிறேன்.
தெருநாய்கள் பிரச்சனைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள், அதைப்பற்றி விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னவென்று தெரிந்தவர்கள் நமக்காக பொதி சுமந்த கழுதையை காணவில்லை, அதுகுறித்து யாரேனும் கவலைப்படுகிறீர்களா? கழுதைகளை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா?
எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்; எவ்வளவு முடியுமோ அவ்வளவு காப்பாற்ற வேண்டும். அதுதான் என்னுடைய கருத்து என்று கூறினார்.