ஒரே படத்தில் இணையும் விஜய் - கமல் ஹாசன்.. இயக்குனர் பெயரை கேட்டால் அதிர்ந்துபோய் விடுவீர்கள்
விஜய் - கமல்
நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய், உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது.
வெறித்தனமான கூட்டணி
கமல் தயாரிப்பில் விஜய் நடிக்கப்போவதாக கூறப்படும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாகவும் லேட்டஸ்ட் சினிமா பஸ் தெரிவிக்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்க்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
ஏனென்றால், நடிகர் விஜய்யும் அடுத்தடுத்து வெவேறு இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதே போல் வெற்றிமாறனுக்கும் விடுதலை, வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக இன்னும் சில வருடங்கள் இவ்விருவரும் இணைத்து பணிபுரிய எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்று தான் தெரிகிறது.
ஆனால், இதையும் மீறி இருவரும் இணைந்து பணிபுரிந்து கண்டிப்பாக அப்படம் மாபெரும் அளவிற்கு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்..