அடுத்தவர் திருமணம் பற்றி பேச நீங்க யாரு.. விசித்ராவை கடுமையாக எச்சரித்த கமல்
பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கும் தினேஷ் பிரபல சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்கள் முன்பு பிக் பாஸ் வீட்டில் விசித்ரா மற்றும் தினேஷ் இடையே வாக்குவாதம் நடந்தபிறகு பாத்திரம் கழுவும் போது விசித்ரா கோபமாக பேசினார்.

விசித்ராவை எச்சரித்த கமல்
"தினேஷ் உடன் இங்கே கண்டெஸ்டன்ட் ஆக இருக்க முடியல. குடித்தனம் எப்படி நடத்த முடியும்.. ஒட வேண்டியது தான். திரும்ப வந்துடாதமா" என ரச்சிதாவிடம் சொல்வது போல விசித்ரா கேமரா முன் பேசினார்."
"இதை பற்றி கமல் இன்று பேசினார். அடுத்தவர் பர்சனல் விஷயம் பற்றி பேசாதீர்கள். அடுத்தவர் திருமணம் பற்றி பேச நீங்கள் யார், அது அவர்கள் இருவருக்கு தனிப்பட்ட விஷயம். இனிமேல் அப்படி பேசாதீங்க" என சொல்லி கமல் எச்சரித்தார்.
