கமல் ஹாசனுக்கு வில்லனாகவும் மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார்.. வேற லெவல் செய்தி

By Kathick Jun 27, 2022 03:50 PM GMT
Report

கமல் ஹாசன்

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் அடுத்ததாக மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதை அவரே ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

கமல் ஹாசனுக்கு வில்லனாகவும் மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார்.. வேற லெவல் செய்தி | Kamal Haasans Villan For His Next Movie

மகேஷ் நாராயணன் இதற்கு முன் பஹத் பாசிலை வைத்து மாலிக் எனும் படத்தை இயக்கியுள்ளார். ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதாபாத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம். இதில் விஜய் சேதுபதி அல்லது பஹத் பாசில் வில்லனாக நடிக்க பெரிதும் வாய்ப்புகள் உள்ளது என்று தகவல் வெளியாகியிருந்தது.

வில்லனாகும் மலையாள நடிகர்

ஆனால், அவர்கள் இருவரும் இதில் இல்லை என்றும், அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கமல் ஹாசனுக்கு வில்லனாகவும் மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார்.. வேற லெவல் செய்தி | Kamal Haasans Villan For His Next Movie

மேலும், மம்மூட்டியிடம் இயக்குனர் மகேஷ் நாராயணன் கதை சொல்லி, அவருக்கு பிடித்துப்போய்விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US