மருத்துவமனையில் கமல்ஹாசன்.. பிக் பாஸ் இந்த வாரம் யார் தொகுப்பாளர்?
நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 ஷூட்டிங், பிக் பாஸ், அரசியல் என பல வேலைகளில் பிசியாக இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது.
அதனால் அவர் தற்போது சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் cold இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிக் பாஸ்
கமல் மருத்துவமனையில் இருப்பதால் இந்த வாரம் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்க வருவாரா?, அவர் வரவில்லை என்றால் யார் தொகுப்பாளர் என பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
முந்தைய சீசன்களில் நடந்தது போல கமலுக்கு பதில் சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக வரலாம் என தெரிகிறது.
ஆனால் கமல் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என மருத்துவமனை தெரிவித்திருப்பதால், அவரே தான் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri