கமல்ஹாசன் மிக மோசமான ஆள், தரக்குறைவாக பேசிய தாடி பாலாஜி மனைவி நித்யா! வீடியோ உள்ளே
நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன் இரண்டாவது சீசனில் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரும் பங்கேற்றனர்.
தொடரும் பிரச்சனை
அவர்கள் இருவரும் பிக் பாஸ் ஷோவில் சேர்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடைசி நாளில் அவர்கள் சேர்வது போல காட்டப்பட்டது. ஆனால் அவர்கள் இடையே பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நித்யா மகள் போஷிகாவை ரீல்ஸ் வீடியோ செய்ய வைத்து தவறாக வழிநடத்துகிறார், படிப்பு பாதிக்கிறது என சொல்லி பாலாஜி புகார் அளித்து இருக்கிறார். மேலும் குழந்தையை மீட்டு தரும்படியும் கேட்டிருக்கிறார்.
கமலை தரக்குறைவாக பேசிய நித்யா
இந்நிலையில் தாடி பாலாஜி அளித்த பேட்டி பற்றி விளக்கம் கேட்டு நிருபர் ஒருவர் நித்யாவுக்கு போன் செய்து இருக்கிறார். அப்போது பாலாஜி போல தான் மீடியாவுக்கு வர மாட்டேன் என கூறுகிறார்.
மேலும் கமல் பற்றி கேட்டதற்கு, 'கமலை போல ஒரு ஒர்ஸ்ட் கேரக்டர் நான் பார்த்ததே இல்லை' என கூறி இருக்கிறார். அவரை பற்றி பேசினால் நிறைய கன்டென்ட் வெளியில் விட்டுவிடுவேன் எனவும் அவர் கூறி உள்ளார்.
இயக்குனர் சீமான் பொது இடத்தில் திடீர் மயக்கம்! மக்கள் தூக்கி சென்ற பரபரப்பு வீடியோ