மோதல் காரணமாக இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை தவறவிட்ட கமல்.. வாய்ப்பை பயன்படுத்திய ரஜினி
அட இந்த நடிகர் அந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை வேண்டாம் என்று சொன்னாரா? என்னப்பா சொல்லறீங்க என இதுபோல் பல தகவல்களை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்யமான தகவல் குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
கமல் ஹாசன்
உலக நாயகன் கமல் ஹாசன் திரையுலகில் செய்யாத விஷயமே இல்லை. அதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அவர் செய்வதாக இருந்து பின், செய்யமுடியாமல் போன விஷயமும் சினிமாவில் இருக்கிறது. அதுதான் எந்திரன் திரைப்படம்.
எந்திரன்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் எந்திரன். தமிழ் சினிமாவில் இப்படியொரு படமா! இதுவரை தென்னிந்திய சினிமாவில் யாரும் பார்த்திராத ஓர் பிரமாண்ட என அனைவரையும் இப்படம் மிரட்சியில் ஆழ்த்தியது.
ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ரஜினி கிடையாது, கமல் ஹாசன் தான். சொல்லப்போனால் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யும் ஷங்கரால் முதன் முதலில் தேர்வு செய்யப்பட்ட நாயகி இல்லை.
முதல் நாயகன், நாயகி
இப்படத்தின் முதன் முதலில் துவங்கிய போது ஹீரோவாக கமல் ஹாசனும், ஹீரோயினாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் தான் கமிட்டாகியுள்ளனர். படத்திற்கான போட்டோஷூட் கூட நடந்துள்ளது. அதன்பின் ஏற்பட்ட சில மோதல் காரணமாக அந்த நேரத்தில் இப்படத்தை கைவிட்டனர்.
இதன்பின் மீண்டும் இப்படத்தை எடுக்க முடிவு செய்த ஷங்கர், கமல் நடிக்கவிருந்த ரோலில் ரஜினியையும், ப்ரீத்தி ஜிந்தா நடிக்கவிருந்த ரோலில் ஐஸ்வர்யா ராய்யையும் வைத்து எந்திரன் படத்தை எடுத்துள்ளார்.
இப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. 2010ஆம் ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக எந்திரன் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.