விஜய்யை ஏன் ஐயா என்று கூப்பிட்டீர்கள், பத்திரிகையாளர் கேள்விக்கு கமல் பதில்
கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் விக்ரம். இப்படம் எல்லோரின் எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் இப்படம் 7 நாட்களில் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 230 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதோடு கமல்ஹாசன் தான் இப்படத்தை தயாரித்தும் இருந்தார், இவரிடம் ரசிகர் ஒருவர் விஜய்யை வைத்து படம் எடுப்பீர்களா என கேட்க, விஜய் ஐயா கால்ஷிட் கொடுத்தால் எடுப்பேன் என்றார்.
இதுக்குறித்து பத்திரிகையாளர் ஒருவர் ஏன் விஜய்யை அப்படி குறிப்பிட்டீர்கள் என கேட்டார்.
அதற்கு கமல் ‘அது ஒரு மரியாதை நிமித்தமாக அழைத்தேன், என்னை கூட சிவாஜி, ”கமல் ஐயா அவர்களே”, என்று குறிப்பிடுவார்’ என கூறியுள்ளார்.
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu