மீண்டும் தமிழ் சினிமாவின் NO.1 கமல் ! எவரும் வாங்காத சம்பளம்..
கமலின் சம்பளம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் உலகநாயகன் கமல், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
பல வருடங்களுக்கு பிறகு கமலின் திரைப்படம் வெளியானலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று, இதுவரை தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது விக்ரம்.
அப்படியான இமாலய வெற்றியடைந்துள்ள விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் நிர்ணயித்துள்ள சம்பளம் ரூ.130 கோடி என சொல்லப்படுகிறது.
விக்ரம் படத்திற்கு பிறகு இனி அவர் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் ரூ.130 கோடி அளவில் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன்முலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார் கமல்.
எப்படி இருக்கிறார் விக்ரம்? எப்போது டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை