நிக்சன் எங்க சொறுவுவீங்க.. கோபத்தின் உச்சத்தில் கமல்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா
அர்ச்சனா - நிக்சன் மோதல்
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக நடந்த மோதல் என்றால் அது அர்ச்சனாவிற்கும் நிக்சனுக்கும் இடையே நடந்த மோதல் தான்.
இந்த மோதலின் இறுதியில் அர்ச்சனாவை பார்த்து சொறுவிடுவேன் என்ற வார்த்தையை நிக்சன் பயன்படுத்தினார். இதை ரசிகர்கள் பலரும் கண்டித்து பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் கமல் ஹாசன் இதுகுறித்து பேசியுள்ளார். தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் தனக்கு நடந்த அநீதி குறித்து உரிமை குரல் தூக்கினார் அர்ச்சனா.
கோபத்தின் உச்சியில் கமல்
இதன்பின் நிக்சனை வறுத்தெடுக்கிறார் கமல். சொறுவிடுவேன் என்று சொன்னீர்களே நிக்சன் எங்க சொறுவுவீங்க? என கோபத்துடன் கேட்கிறார். இதன்பின் இப்படி பேசியதற்காக நிக்சனுக்கு முதல் ஸ்ட்ரைக் கார்டை கொடுத்துள்ளார் கமல்.

இது வெறும் வாரிங் தானா அல்லது, இந்த வாரம் நிக்சன் வீட்டை விட்டு செல்ல வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri