தேவர்மகன் 2 ட்ராப் ஆகிவிட்டதா? இயக்குனரே கொடுத்த விளக்கம் இதோ
உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படத்தை தொடர்ந்து பல இயக்குனர்களுடன் லைன் அப் வைத்திருக்கிறார்.
கமல் நடித்து 2018 வெளியான "விஸ்வரூபம்- 2 " அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
லைன் அப்
தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கமல் ஹாசன் தனது அடுத்தடுத்த படத்தின் லைன் அப் அப்டேட்களை கூறிவருகிறார்.
சமீபத்தில் கமலின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதில் ரெட் ஜெயன்ட் உடன் சேர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்க உள்ளது.
துணிவு பட இயக்குனர் ஹெச் வினோத் கமலின் 233-வது படத்தை இயக்க உள்ளார் என தாவல் வெளியாகியது. இதை தொடர்ந்து வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்களின் ஸ்கிரிப்ட் ஓகே செய்துள்ளார் கமல்.
தேவர் மகன்- 2
விக்ரம் படத்திற்கு முன்பே கமல் மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் இணையவுள்ளார் என தகவல் வெளிவந்தது. அந்த படத்தில் 1992ல் வெளியான தேவர் மகன் படத்தின் தொடர்ச்சியாக கதை அமைந்து இருக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று தேவர்மகன் 2 படம் ட்ராப் ஆனது என்று செய்தி வந்த நிலையில், தற்போது மகேஷ் நாராயணன் பேட்டி அளித்துள்ளார்.
"இல்லை படம் ட்ராப் ஆகவில்லை. இது கமல் சார் எழுதிய ஸ்கிரிப்ட். தற்போது அவர் பிஸியாக மற்ற படங்களில் நடித்து வருகிறார், அதை முடித்த பிறகு எங்கள் கூட்டணி தொடங்கும். நான் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலமாக அங்கமாக இருந்துளேன்" என கூறினார்
நடிகை அம்பிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய புகைப்படம்