சூர்யாவிற்கு பரிசாக அளித்த Rolex வாட்சை, கமல் இதற்கு முன் எந்த திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார் தெரியுமா?
கமல் பரிசாக அளித்த வாட்ச்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாக பட்டித்தொட்டியேங்கும் ஹிட்டான திரைப்படம் விக்ரம்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது, மேலும் தமிழகத்தில் விக்ரம் திரைப்படம் தற்போது அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.
இதற்கிடையே விக்ரம் திரைப்படத்தில் கடைசி நிமிட காட்சியில் வந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக இருந்தவர் நடிகர் சூர்யா, ரொலக்ஸ் கதாபாத்திரம் இந்தியளவில் பேசப்படும் அளவிற்கு பேமஸ் ஆகிவிட்டது.
மேலும் கமல் இதற்காக நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து அவருக்கு மிகவும் பிடித்த ரொலக்ஸ் வாட்சை பரிசாக அளித்திருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பயங்கர வைரலானது.
இதற்கிடையே கமலின் அந்த வாட்ச் கமல் இதற்கு எந்த திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ளனர் ரசிகர்கள். ஆம், கமல் அந்த வாட்சை மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பயன்படுத்தியுள்ளார்.
அந்த புகைப்படம் தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தற்போது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பில்லா 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ