ரஜினியின் கூலி படத்தில் கமல்ஹாசனா?.. வெளிவந்த வெறித்தனமான அப்டேட்
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14- ம் தேதி திரைக்கு வர உள்ளது.
வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, கூலி படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல் ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக கமலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அனைத்தும் சரியாக நடந்தால், அடுத்த வாரம் கமல் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
