இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே. இவங்கள என்ன செய்யலாம்: கோபமாக பேசிய கமல்
பிக் பாஸில் கமல்
நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவருக்கு பதில் வேறு ஒருவர் பிக் பாஸுக்கு இந்த வாரம் தொகுப்பாளராக வரலாம் என முதலில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது கமல்ஹாசனே குணமடைந்து இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.
இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் நடந்த நீதிமன்றம் டாஸ்க் பற்றி கமல் கோபமாக பேசி இருக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இவங்கள என்ன பண்ணலாம்..
"நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. ஆனால் இந்த வழக்கில் குற்றம் செய்தவர் யார் என்றே தெரியாமல் விசாரித்து தீர்ப்பும் அளிக்கப்பட்டு இருக்கிறது. குற்றம் செய்தவர் யார் என நிஜமகாவே தெரியாதா, இல்லை தெரிவிக்க விரும்பவில்லையா."
"இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே, இவங்கள என்ன செய்யலாம்" என கமல் பேசி இருக்கிறார்.
ப்ரோமோ இதோ..
#Day48 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/E5cSnl4CTd
— Vijay Television (@vijaytelevision) November 26, 2022
கண்கலங்கி பேசிய விஜய் டிவி பிரியங்கா! பிக் பாஸ் போனதே தப்பு, ஆனால்..