காலண்டரில் வெங்கடாசலபதி, ஆனாலும் திருப்பதியில் கூட்டம் குறையாது! கமல் சொன்ன எடுத்துக்காட்டு

By Parthiban.A May 16, 2022 09:30 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் கமல் பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார்.

தான் முழுநேர நடிகரும் இல்லை, முழு நேர அரசியல்வாதியும் இல்லை என குறிப்பிட்டார். மேலும் லோகேஷ் கனகராஜ் தன் ரசிகராக இருந்து தற்போது எனக்கே ஆக்ஷன் சொல்லும் வளர்ந்திருப்பது மகிழ்ச்சி என்றும் கூறினார்.

காலண்டரில் வெங்கடாசலபதி, ஆனாலும் திருப்பதியில் கூட்டம் குறையாது! கமல் சொன்ன எடுத்துக்காட்டு | Kamalhaasan About Ott And Theaters

மேலும் ஓடிடி தளங்கள் அதிகம் பாப்புலர் ஆவதால் தியேட்டர்களுக்கு ஆபத்தா என்ற கேள்விக்கு பதில் சொன்ன அவர், 'தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது, அதற்காக மக்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு கண்டிப்பாக வருவார்கள் என கூறினார்.

'காலண்டரில் வெங்கடாசலபதி போட்டோ இருக்கிறது, ஆனாலும் திருப்பதியில் கூட்டம் குறையாது' என கமல் ஒரு எடுத்துக்காட்டையும் கூறினார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US