நான் 3ம் க்ளாஸ், நீ 8ம் க்ளாஸ்: கமலை அய்யா என சொன்ன சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன் பற்றி உருக்கமான ஒரு விஷயத்தை கமல்ஹாசன் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தெரிவித்து இருக்கிறார்.
கமலுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என கேட்க அவர் தனக்கு நான்கு மொழிகள் தெரியும் என கூறினார். ஆனால் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே எழுத படிக்க தெரியும் எனவும் கூறினார்.
மேலும் சிவாஜி கணேசன் பற்றி கூறிய கமல் அவர் தன்னை அதிகம் படித்தவர் என கூறுவார் என தெரிவித்து உள்ளார். 'நான் (சிவாஜி) மூன்றாம் க்ளாஸ், நீ 8ம் க்ளாஸ். அதனால் உன்னிடம் மரியாதையாக பேசவேண்டும்' என சிவாஜி கமலிடம் பலமுறை கூறி இருக்கிறாராம்.
சிவாஜி பொது நிகழ்ச்சிகளில் கமல் பற்றி பேசினால் கூட அவரை ’கமல் அய்யா’ என குறிப்பிடுவது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீங்களே வீடியோவில் பாருங்க