என் மகள்கள் கடத்தப்பட்டார்கள்! உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம்.. கமல்ஹாசன் கூறிய அதிர்ச்சி தகவல்
நடிகர் கமல்ஹாசன்
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். நடிப்பை தாண்டி சில படங்களை இயக்கியும் உள்ளார்.
அந்த வகையில், 1994-ம் ஆண்டு இவர் கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாக நடித்த படம் மகாநதி. இந்த படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று 2 தேசிய விருதுகளை தட்டி சென்றது.
கமல்ஹாசன் கூறிய தகவல்
ஆனால், மகாநதி படம் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது எத்தனை பெருக்கு தெரியும். ஆம், இந்த படம் கமல்ஹாசன் வாழ்க்கையில் அவரது மகள்களுக்கு நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இந்த படத்தை எடுத்ததாக ஒரு பேட்டியில் கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.
அதாவது, கமல்ஹாசன் வீட்டில் வேலை பார்க்கும் நபர்கள் அவரது மகள்கள் இருவரையும் கடத்த முயன்றிருக்கிறார்கள். அதை அறிந்து கடும் கோபமடைந்த கமல், அவர்களை கொலை செய்யவும் தயாராக இருந்ததாகவும், அந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் நான் இந்த படத்தை எடுத்தேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
