விசித்ரா கணவருக்கு போன் செய்த கமல்.. என்ன கூறினார் தெரியுமா?
பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளரான விசித்ரா தான் பல வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ தன்னை ரூமுக்கு வரும்படி அழைத்ததாக கூறி இருந்தார். தெலுங்கு ஹீரோ ஒருவர் தான் அது என தற்போது சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது.
குடித்துவிட்டு தனது அறை கதவை தட்டுவார்கள். அப்போது ஹோட்டல் மேனேஜர் ஆக இருந்தவர் தான் உதவி செய்து தினமும் ஒரு அறையில் என்ன தங்க வைத்தார். உதவி செய்தவர் தான் இப்போது என் கணவர் என்றும் விசித்ரா கூறி இருக்கிறார்.

கணவருக்கு போன் செய்த கமல்
விசித்ரா பேசியதை கேட்டுவிட்டு கமல்ஹாசன் அவர் கணவருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார். விசித்ரா இடத்தில் யார் இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பேன் என அவர் கமலிடம் கூறினாராம்.
அதை குறிப்பிட்டு கமல் ஷோவில் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். அந்த விஷயத்தை தனது குழந்தைகளிடம் கூட சொல்லாமல் இருந்தது பெரிய விஷயம் எனவும் கமல் கூறினார்.
பிக் பாஸ் வரும் முன்பே அந்த விஷயத்தை சொல்லலாமா வேண்டாமா என கணவரிடம் பேசிவிட்டு தான் வந்தேன் என விசித்ரா கூறினார்.
