ரிலீசுக்கு முன்பே விக்ரம் படம் இவ்வளவு ஈட்டிவிட்டதா! கமல் கெரியரில் உச்சம்
விக்ரம் படத்தின் ரிலீஸ் ஜூன் 3ம் தேதி என்பதால் தற்போது டிக்கெட் முன்பதிவு பல இடங்களில் தொடங்கிவிட்டது. அதிகாலை 4 மணி காட்சிகள் டிக்கெட் விலை 500 ருபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
கைதி, மாஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதே 200 கோடி ருபாய் வரை வியாபாரம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை பல மொழிகளில் சேர்த்து மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. இதனால் தான் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் 200 கோடி ரூபாயை தொட்டு இருக்கிறது.
கமல் கெரியரில் இதுதான் உச்சகட்ட வியாபாரம் என சொல்லப்படுகிறது. கமல் மட்டுமின்றி இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.

கார்த்தியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன் ! வெளியானது அவரின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்..