அவங்களே பாம் வெப்பாங்க... அவங்களே எடுப்பாங்களாம்! - முக்கிய போட்டியாளரை விமர்சித்த கமல்
பிக் பாஸ் 7ல் இந்த வாரம் நிக்சன் தான் கேப்டனாக இருந்தார். இன்று சனிக்கிழமை எபிசோடில் கமல் வந்தபோது நிக்சன் கேப்டன்சி எப்படி இருந்தது என கேள்விகள் கேட்டார்.
அப்போது நிக்சனுக்கு எதிராக அர்ச்சனா, தினேஷ், மணி உள்ளிட்ட சிலர் பேசினார்கள். நாங்க கேங் இல்லை என்பதை நிரூபிப்பது போலவே மாயா - பூர்ணிமா ஆகியோர் மணி அடித்து புகார் கொடுத்தார்கள் என அர்ச்சனா விமர்சனம் செய்தார்,
மேலும் கூல் சுரேஷ் பேசும்போது 'இவர்களே பாம் வெப்பாங்களாம், அப்புறம் அவங்களே எடுப்பாங்களாம்' என மாயா கேங்கை கமல் முன் விமர்சித்தார்.
தாக்கி பேசிய கமல்
அதன் பின் பேசிய கமல் 'தலைமை என்பது பிரதிபலன் ஏதிர்பார்க்காமல் இருக்க வேண்டும். கேப்டன் என்பதற்காக மரியாதை எதிர்பார்க்க கூடாது' என கமல் விமர்சித்தார்.
'நான் நிக்சனை மட்டும் சொல்லல, நாட்டிலும் தான் சொல்கிறேன்' என கமல் மேலும் கூறி இருக்கிறார்.